87. நல்லது, அதை எழுதினவர் யாராயிருப்பினும், நான் உங்களுடன் இணங்குகிறேன். அவர்கள் அதை உலகிற்கு சாபமாக்கிவிட்டனர், அது உலகிற்கு ஆசீர்வாதமாக இருந்திருக்ககூடும், ஆனால் அவர்களோ அதை சாபமாக்கி விட்டனர். என் அருமை மக்களே, அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் எந்தவகையில் நோக்குகிறீர்கள் என்பதை பொறுத்தது, தொலைகாட்சி சாபமாகக் கருதப்படுமானால், செய்திதாளும் சாபமே, வானோலியும் சாபமே, அநேகமுறை தொலைபேசியும் சாபமாக உள்ளது. பாருங்கள், பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? நீங்கள் அதை எவ்விதமாக செய்துவிடுகிறீர்கள் என்பதை அனுசரித்து அது உள்ளது. அன்றிரவு அந்த சகோதரன் கூறினவிதமாக, தொலைக்காட்சியில் இப்பொழுது சுவிசேஷ நிகழ்ச்சிகளே இருப்பதில்லை. ஏனெனில் அதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. முழு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஒரு எளிய போதகருக்கு தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியைத் தர இயலாது. எனவே... அன்றிரவு சகோதரன் இங்கு கூறினாரென்று நினைக்கிறேன், அல்லது வேறெங்கோ. அவர் ''உங்கள் வானோலிப்பெட்டியின் மேலுள்ள தூசைத் துடைத்துவிட்டு அதை மூலையிலிருந்து கொண்டு வந்து சுவிசேஷ நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்'' என்றார். அது உண்மை.
88. ஆனால் அன்பார்ந்த நபரே, நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுடன் நான் நிச்சயம் இணங்குகிறேன். அது மானிட வர்க்கத்துக்கே மிகவும் வெறுக்கப்படத்தக்க ஒன்றாக உள்ளது. அரசாங்கத்துக்கு வரிகளாக செல்லவேண்டிய பணத்தை அவர்கள் எடுத்து, சிகரெட்டுகள் விஸ்கி போன்றவைகளை விளம்பரப்படுத்துவதற்காக நிகழ்ச்சிகளை நடத்தி, அரசாங்க வரிகளிலிருந்து சலுகை பெற்று, அதன் பிறகு அவர்கள் சிறுதொகையைப் பெற, போதகர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்கின்றனர். நான் உங்களுடன் இணங்குகிறேன். அது மிகவும் பயங்கரமான ஒன்று... நீங்கள் அதில் காணும் நிகழ்ச்சி என்ன வென்பதைப் பொறுத்தது. இந்த கேள்வியைக் கேட்டது சகோதரன் அல்லது சகோதரி யாராயிருப்பினும் உங்களுக்கு என் நன்றி.