Q.94. இது நல்ல கேள்வி: வேதாகமத்தில் 1 சாமுவேல் 18:10 போன்ற இடங்களில், தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி செயல் புரிந்தது என்று எழுதப்பட்டுள்ளது. "தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி'' என்பது எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து இதை விளக்கவும்.
89. நல்லது, தேவனுடைய உதவியைக் கொண்டு என்னால் முடியும் என்று நினைக்கிறேன். தேவன் பொல்லாத ஆவி என்று இதன் அர்த்தமல்ல. ஆனால் எல்லா ஆவிகளுமே தேவனுக்குக் கீழ்ப்பட்டுள்ளது. அவர் எல்லாவற்றையும் தமது சித்தத்துக்கு ஏற்றவாறு கிரியை செய்யும்படி பண்ணுகிறார். பாருங்கள்?
90. சவுலைத் துன்புறுத்த தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவியைக் குறித்து நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். சவுல் மனோநிலை சரியில்லாத, நொறுங்கிய நிலையில் இருந்தான். ஏனெனில் முதலாவதாக அவன் பின்வாங்கிப் போயிருந்தான். நீங்களும் பின்வாங்கிப் போகும்போது, உங்களை துன்புறத்த தேவன் ஒரு பொல்லாத ஆவியை அனுமதிப்பார்.
91. இன்னும் சிறிது நேரத்தில் ஒன்றை உங்களுக்கு படித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அதை குறித்து எனக்கு இங்கு மற்றொரு கருத்து உள்ளது. பாருங்கள்? ஒவ்வொரு ஆவியும் தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். யோசபாத்தும் ஆகாபும் போருக்குப் புறப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதலாவதாக அவர்கள் ஒலிமுக வாசல்களில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். யோசபாத் நீதிமான். அவன் (அந்த இரண்டு ராஜாக்களும் அங்கு உட்கார்ந்து கொண்டு, தங்கள் சேனைகளை ஒன்று கூட்டினர். எனவே அவன், "நாம் யுத்தத்துக்கு போகலாமா வேண்டாமா என்று கர்த்தரிடத்தில் விசாரிப்போம்'' என்றான்.
92. ஆகாப் தன் பாதுகாப்பில் இருந்த நானூறு தீர்க்கதரிசிகளை வர வழைத்தான். அவன் அவர்களைப் போஷித்து கொழுக்க வைத்திருந்தான். அவர்கள் திடகாத்திரமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்கள் அங்கு வந்து, ஒரு மனதுடன் தீர்க்கதரிசனம் உரைத்து, ''நீங்கள் போகலாம். தேவன் உங்களுக்கு வெற்றியைத் தருவார். நீங்கள் கீலோயாத்திலுள்ள ராமோத்தின் மேல் யுத்தம் பண்ணப் புறப்படுங்கள். அங்கு கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்” என்றனர். அவர்களில் ஒருவன் ஒரு உதாரணத்துக்காக தனக்கு இருப்புக் கொம்புகளை உண்டாக்கி, இவைகளைக்கொண்டு நீர் அவர்களை தேசத்துக்குப் புறம்பே தள்ளிவிடுவீர்; அது உமக்குத் சொந்தமானது” என்றான்.
93. ஆனால் உங்களுக்குத் தெரியுமா, தேவனுடைய மனிதனிடத்திலுள்ள ஒன்று இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாது. பாருங்கள்? அது வேதத்துடன் ஒத்துப்போகவில்லையென்றால், ஏதோ தவறுள்ளது. எந்த உண்மையான விசுவாசியும். எனவே யோசபாத், "நல்லது, இந்த நானூறு பேர்களும் காண்பதற்கு நன்றாயிருக்கின்றனர். அவர்கள் நல்லவர்கள் போல் தோன்றுகிறது'' என்றான்.
“ஓ, அவர்கள் நல்லவர்களே, என்று ஆகாப் கூறியிருப்பான்.
ஆனால் யோசபாத்தோ, “வேறு யாராகிலும் இங்கே இல்லையா?” என்று வினவினான். நானூறு பேர் ஒருமனதுடன் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளபோது, ஏன் வேறு யாராகிலும் வேண்டும்? ஏனெனில் சரியாக இல்லாத ஏதோ ஒன்று உள்ளது என்று யோசபாத் கண்டு கொண்டான். பாருங்கள்?
ஆகாப், “இன்னும் ஒருவன் இருக்கிறான். அவன்தான் இம்லாவின் குமாரனாகிய மிகாயா. ஆனால் நான் அவனைப் பகைக்கிறேன்'' என்றான். நிச்சயமாக! அவன் அவனுடைய சபையை அடைத்துவிட்டு எந்த நேரம் வேண்டுமானாலும் அவனை தேசத்தை விட்டு துரத்தி விடுவான். பாருங்கள்? "நிச்சயமாகவே நான் அவனைப் பகைக்கிறேன்.''
''நீர் ஏன் அவனைப் பகைக்கிறீர்”
"அவன் எப்பொழுதுமே என்னைக் குறித்து தீமையாக தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன்.'' அப்பொழுதே யோசபாத் ஏதோ சரியில்லை என்பதை கண்டு கொண்டான் என்று எண்ணுகிறேன்.
அவன், ''மிகாயாவை அழைத்து வா'' என்றான்.
எனவே அவர்கள் அவனிடம் சென்றனர், அவன் அவர்களிருந்த இடத்துக்கு வந்தான்... அவர்கள் மிகாயாவிடம் அனுப்பின ஆள் அவனுடன் பேசி, "அங்கு வேதசாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற நானூறு பேர் இருக்கின்றனர். அவர்கள் தேசத்திலேயே சிறந்தவர்கள். பி.எச்.டி. எல்.எல்.டி. பட்டம் பெற்றவர்கள். படிப்பில்லாத எளியவனாகிய நீர் அத்தனை குருவானவர்கள் கூறினதுடன் இணங்காமலிருக்க மாட்டீர்” என்றான்.
94. அப்பொழுது இம்லா, இல்லை மிகாயா, “தேவன் ஒன்றை என் வாயில் போடாமல் நான் எதையும் சொல்லமாட்டேன். அவர் என்ன கூறுகிறாரோ அதை அப்படியே எடுத்துரைப்பேன்'' என்றான். அது எனக்கு பிரியம். அது எனக்கு பிரியம். வேறு விதமாக கூறினால், "நான் வார்த்தையில் நிலைகொள்வேன்.” மற்றவர்கள் என்ன கூறினபோதிலும் அவனுக்குக் கவலையில்லை. அந்த ஆள் ''நீர் துரத்தப்படாலிருக்க விரும்பினால் அவர்கள் சொன்னதையே சொல்லும்'' என்றான்.
மிகாயா அங்கு சென்றான். ராஜா, ''நாங்கள் போகலாமா?'' என்று கேட்டான்.
அவன், “போங்கள்'' என்று சொல்லிவிட்டு, "இன்றிரவு எனக்கு அவகாசம் கொடுங்கள். நான் அதைக் குறித்து கர்த்தரிடத்தில் பேச விரும்புகிறேன்” என்றான். அது எனக்கு பிரியம். அன்றிரவு. கர்த்தர் அவனுக்கு தோன்றினார். அடுத்த நாள் மிகாயா அவர்களிடம் சென்று, ''போங்கள். ஆனால் இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்'' என்றான். ஓ, என்னே! அது ராஜாவை கோபமூட்டியது.
ஆகாப், "நான் ஏற்கெனவே உம்மோடே சொல்லவில்லையா? எனக்குத் தெரியும். அவன் ஒவ்வொரு முறையும் இதே போன்று என்னைக் குறித்து தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன்'' என்றான்.
95. ஏன்! அவன் வார்த்தையில் நிலைகொண்டிருந்தான். ஏன்? அவனுக்கு முன்பிருந்த உண்மையான தீர்க்கதரிசியாகிய எலியா ஆகாபை நோக்கி, ''நீ குற்றமற்ற நாபோத்தின் இரத்தத்தை சிந்தினதால், நாய்கள் உன் இரத்தத்தையும் கூட நக்கும்” என்று அவனுக்குண்டான தேவனுடைய வார்த்தையை உரைத்திருந்தான். அவன் தீமையானதை சொல்லியிருந்தான். எலியா பரலோகத்துக்கு ஏறி சென்று விட்டான். இருப்பினும் எலியா தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்தான். என்று மிகாயா அறிந்தவனாய், வார்த்தையில் நிலைகொண்டிருந்தான். அது எனக்குப் பிரியம். வார்த்தையில் நிலைகொள்ளுங்கள்.
96. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், அவருடைய வல்லமை இன்றைக்கும் மாறாததாயுள்ளது என்றும் பரிசுத்த ஆவி அதை விரும்பும் யாவருக்கும் உள்ளது, அவன் வந்து பெற்றுக்கொள்ளட்டும் என்று வேதம் கூறியிருக்குமானால், அந்த வார்த்தையில் நிலைகொள்ளுங்கள். ஆம், ஐயா! மற்றவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை. அவர்கள் எவ்வளவு நன்றாக போஷிக்கப்பட்டிருந்தாலும், எத்தனை வேத பள்ளிகளுக்கு சென்றிருந்தாலும், அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
எனவே அவன் கூறினான்... தலையில் இருப்புக் கொம்புகளை சுமந்து, எதிரிகளை தேசத்திலிருந்து துரத்தியடிப்பதாக தீர்க்கதரிசனம் உரைத்த இந்த திடகாத்திரமுள்ளவன், மிகாயாவின் அருகில் சென்று (இந்த சிறு போதகரின் அருகில்), அவனைக் கன்னத்தில் அடித்தான். மிகாயா ஒரு சிறு உருளும் பரிசுத்தன் என்று அவன் அறிந்திருந்தான். ஆகையால் அதைக் குறித்து யாரும் ஒன்றும் கூறப்போவதில்லையென்று அவன் எண்ணி, அவனைக் கன்னத்தில் அடித்து, ''கர்த்தருடைய ஆவி என்ன வழியாய் என்னை விட்டு உன்னோடு பேசும்படி வந்தது?” என்றான்.
97. அப்பொழுது மிகாயா, "நீ சிறைபிடிக்கப்பட்டு உள்ளறையிலே உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அதை புரிந்து கொள்வாய்.'' என்றான் அவன், "கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதைக் கண்டேன். (ஆமென்! இப்பொழுது கவனியுங்கள்!) பரமசேனை அவரைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தது.'' என்றான். என்ன விஷயம்? ஆகாபுக்கு என்ன நேரிடும் என்பதைக் குறித்து அவருடைய தீர்க்கதரிசி ஏற்கெனவே உரைத்து விட்டான். தேவன்... அது எலியாவின் வார்த்தையல்ல; அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் தேவனுடைய வார்த்தை மிகாயா, "பரம சேனை தேவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருப்பதை நான் கண்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தேவனுடைய வார்த்தை. நிறைவேற்றி, அவனை யுத்தத்தில் கொல்லப்பட வைப்பதற்காக, உங்களில் யார் சென்று ஆகாபை வஞ்சிக்கப் போகிறீர்கள்? நாம் யாரை அனுப்பலாம்?'' என்று கேட்டார்'' என்றார்.
98. அவன் தொடர்ந்து, "ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். அப்பொழுது ஒரு பொல்லாத ஆவி- பொய்யின் ஆவி - கீழேயிருந்து புறப்பட்டு அங்கு வந்து, நான் பொய்யின் ஆவி. நீர் என்னை அனுமதிப்பீரானால், நான் சென்று போதகர்கள் எல்லாருக்குள்ளும் நுழைந்து பொய்யின் ஆவியாயிருப்பேன். ஏனெனில் அவர்களிடம் பரிசுத்த ஆவி இல்லை. (அவர்கள் வேதப்பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் மாத்திரமே). நான் சென்று அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நுழைந்து அவர்களை வஞ்சித்து, பொய்யை தீர்க்கதரிசனமாக உரைக்கப்பண்ணுவேன். அப்படித்தான் நான் ஏமாற்றி வருகிறேன்'' என்றது'' என்றன்.
அப்பொழுது தேவன், "நீ போக அனுமதியளிக்கிறேன்'' என்றார்.
99. அப்பொழுது பொய்யின் ஆவி இறங்கிச் சென்று வேதாகமப் பள்ளிகளில் பயிற்சி பெற்றிருந்த அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் அனைவரின் வாயிலும் நுழைந்து, அவர்கள் பொய்யை தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்தது. அது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றின பொய்யின் ஆவி. இதை நான் கூறட்டும்... நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக வேறொன்றை... ஒரு நிமிடம் பாருங்கள்? இதை கவனியுங்கள். என்னுடன் 1கொரிந்திரியர் 5ம் அதிகாரம் முதலாம் வசனத்துக்கு வேதாகமத்தை ஒரு நிமிடம் திருப்புங்கள். 1கொரிந்திரியர்... நீங்கள் ஒன்றைக் காண விரும்பினால், இதை கவனியுங்கள், எப்படி தேவன் பொல்லாத ஆவிகளை உபயோகிக்கிறார் என்றும் அவை எவ்விதம் கிரியை செய்கிற தென்று... சரி பவுல் கூறுகின்றான்.
உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே (அப்படியானால் அது சபையில் இருக்கலாம் என்று நீங்கள் எப்படி நினைக்கமுடியும்?)
இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களை விட்டு நீக்காமலும்... (நான் இரண்டு பக்கங்கள் திரும்பி விட்டேன் என்று நினைக்கிறேன்)... துக்கப்படாமலும்... (சற்று பொறுங்கள். நான்... இல்லை, அது சரியாகத்தான் உள்ளது. ஆம்!) இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
100. எனக்குத் தெரியாது. யாராகிலும் இதற்கு விரோதமாக கருத்து தெரிவிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் விசுவாசிப்பது சரியென்று கூற முற்படுகிறேன். அதாவது, ஒருவன் பரிசுத்த ஆவியினால் ஒரு முறை நிறையப்பட்டால், அவன் அதை இழந்து போக முடியாது. பாருங்கள்?
நான் சரீரத்தினால் உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடே இருக்கிறவனாய், இப்படி செய்த வனைக் குறித்து நான் கூட இருக்கிறது போல்,
நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடி வந்திருக்கையில்,
அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தீர்ப்புச் செய்கிறேன்.
101. தேவன் தமது பரிசுத்த சபைக்கு, இப்பூமியிலுள்ள தமது சரீரத்துக்கு இதை கூறுகிறார். (இது பழைய ஏற்பாட்டின் காலத்துக்குப் பிறகு, புதிய ஏற்பாட்டின் காலத்தில்) - ஜனங்களின் மத்தியில் மிகவும் அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, தன் தகப்பனுடைய மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு இதைக் கூறுகிறார். அவர் “அப்படிப்பட்ட காரியம் கிறிஸ்துவின் சரீரத்தில் நடந்துள்ளது. சபையே, அவனை அழிவுக்காக சாத்தானுக்கு ஒப்புக் கொடுங்கள்,'' என்கிறார். பாருங்கள்? தேவன் அனுமதிக்கிறார். ஒன்று செய்யப்படுவதைக் காணவேண்டுமென்று அவர் நினைக்கும்போது - ஒருவருக்கு சாட்டை அடி கொடுக்க அவர் நினைக்கும்போது- அவர் பொல்லாத ஆவிக்கு அவன் மேல் அனுப்புகிறார். அந்த பொல்லாத ஆவி அவனைத் துன்பப்படுத்தி, அவனைத் திரும்பக் கொண்டு வருகிறது. நாம் காண்கிறோம். இந்த மனிதன்...
102. இன்றைய சபைகளிலும் அதுதான் விவகாரம். ஒருவன் கிறிஸ்துவின் சரீரத்துக்குள் வந்து அதன் ஒரு அங்கத்தினனாகி, பொல்லாத காரியங்களைச் செய்யும்போது, நீங்கள் ஒன்று கூடி அதே காரியத்தைச் செய்வதற்கு பதிலாக பிரன்ஹாம் கூடாரத்தைச் சேர்ந்தவர்களே, அதைச் செய்யுங்கள், ஏனெனில் நீங்கள் அவனுக்காக முறையிடும் வரைக்கும். அதன் இரத்தத்தின் கீழிருந்து கொண்டு, அதே செயலை மறுபடியும் மறுபடியும் புரிந்து கொண்டேயிருக்கிறான். ஆனால் நீங்கள் ஒன்று கூடி, அவனுடைய ஆவி கர்த்தருடைய நாளிலே இரட்சிக்கப்படும்படிக்கு, மாம்சத்தின் அழிவுக்காக அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். தேவனுடைய சாட்டை அப்பொழுது வருவதைக் கவனியுங்கள். பிசாசு அவனை ஆட்கொள்வதைக் கவனியுங்கள். பொல்லாத ஆவி அவனைத் துன்புறுத்தத் தொடங்குகிறது.
103. அப்பொழுது அவன் நேராகி திரும்ப வருகிறான். அவன் தேவனுடைய சமூகத்தில் சுத்திகரிக்கப்பட்டவனாய் இருப்பதை நாம் 2 கொரிந்தியரில் காண்கிறோம்.
104. யோபுவைப் பாருங்கள், ஒரு பரிபூரணமான மனிதன், நீதிமான் அவனுடைய ஆவி பரிபூரணப்படுவதற்காக பொல்லாத பிசாசு அவன் மேல் வந்து அவனைத் துன்புறுத்த தேவன் அனுமதித்தார். பாருங்கள்? எனவே பொல்லாத ஆவி... தேவன் தமது திட்டத்தையும் சித்தத்தையும் நிறைவேற்ற அநேக சமயங்களில் பொல்லாத ஆவிகளை உபயோகிக்கிறார்.