105. என் சகோதரனே, சகோதரியே என்னால் கூற முடியாது. அதற்கான வேத வசனத்தை என்னால் வேதாகமத்தில் எங்கும் காணமுடியவில்லை. ஆனால் என் கருத்துக்களை நான் கூற முடியும். தேவனுடைய கிருபையின் பேரில் விசுவாசம் கொண்டுள்ள உங்களை அது பெலப்படுத்தும். பாருங்கள், இந்த நபர் அறிய விரும்புகிறார் (அது நல்ல கேள்வி பாருங்கள்?); எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க வேண்டும் என்றால், குழந்தையின் நிலையென்ன என்று இவர் அறிய விரும்புகிறார்... நான் ஏற்கெனவே கூறின படி, அது உண்மை. அது வேதப்பிரகாரமானது. அதைதான் வேதம் போதிக்கிறது. அதாவது பரலோகத்துக்கு செல்ல முடியாது… பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கு கொள்வார்கள் - தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். மற்றவர்கள்... மரணமடைந்த மற்றவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்பு, இரண்டாம் உயிர்த்தெழுதல், பின்பு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு. பாருங்கள்? அதுதான் வேதத்தில் கூறப்பட்டுள்ள சரியான வரிசைக்கிரமம். ஆனால் குழந்தைகளுக்கு என்ன நேரிடுமென்று இந்த நபர் அறிய விரும்புகிறார். அவர்கள். வேறு விதமாகக் கூறினால், அவர்கள் பிறப்பதற்கு முன்பே பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனரா? அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டனரா? என்னால் கூற முடியாது.
106. இப்பொழுது, அதை இப்படி நாம் கூறுவோம்: மரிக்கும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர் யாராயிருப்பினும், இரட்சிக்கப்படுகின்றனர் என்று நமக்குத் தெரியும். அந்த விஷயத்தில் தீர்க்கதரிசிகளின் குழு கொண்டுள்ள கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன். பாவமுள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தை மரிக்க நேரிட்டால், அது நரகத்துக்கு சென்று அழிந்து போகும், அதற்கு விமோசனமே இல்லையென்று அவர்கள் கூறுகின்றனர். யோவான் ஸ்நானன் இயேசுவை நோக்கி, "இதோ உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான். அந்த குழந்தை, தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குள் வர வேண்டிய மானிடக் குழந்தை என்னும் போது, பாவத்தைப் போக்க இயேசு மரித்தாரென்றால், இயேசு அந்த நோக்கத்துக்காக மரித்துள்ள போது, எல்லா பாவமும் தேவனுடைய பார்வையில் நீக்கப்பட்டு விட்டது. உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன, நாம் மன்னிக்கப்படக்கூடிய ஒரே வழி, அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுதலே. ஆனால் இந்த குழந்தையோ மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒன்றுமே செய்யவில்லை. அது ஒன்றும் செய்யவில்லை. எனவே அது பரலோகத்துக்கு செல்வதற்கு முற்றிலும் விடுதலையடைந்துள்ளது.
107. ஆனால் நீங்கள், ''அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வார்களா?” என்று கேட்கலாம். இப்பொழுது, இது என் சொந்த வார்த்தை, இது என் சொந்த கருத்து... இதை என்னால் வேதாகமத்தைக் கொண்டு நிரூபிக்க முடியாது. கவனியுங்கள். இவ்வுலகில் தோன்றவிருக்கும் மானிடவர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்னே அறிந்திருப்பாரானால்... அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் ஒவ்வொரு கொசுவையும், ஒவ்வொரு வண்டையும், ஈக்கள் ஒவ்வொன்றையும்- இவ்வுலகில் தோன்றவிருக்கும் ஒவ்வொன்றையும் - முன்னமே அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருப்பாரானால்...
108. கவனியுங்கள். மோசேயை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மோசே பிறந்தபோது, அவன் தீர்க்கதரிசியாயிருந்தான். எரேமியா தோன்றுவதற்கு முன்னமே... தேவன் எரேமியாவிடம், "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக கட்டளையிட்டேன்'' என்றார். (எரே. 1:5). யோவான் ஸ்நானன் பிறப்பதற்கு 712 ஆண்டு களுக்கு முன்பே ஏசாயா அவனைத் தரிசனத்தில் கண்டு, ''அவன் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தமாயிருக்கிறான்'' என்றான் (ஏசா.40:5).
109. தேவனுடைய முன்குறித்தல் அல்லது முன்னறிதல் சிறு குழந்தைகளைக் குறித்து எல்லாம் அறிந்துள்ளது (பாருங்கள்?) - அவர்கள் என்ன செய்வார்களென்றும் அவர்கள் மரித்துப் போவார்களென்றும் அவருக்குத் தெரியும். தேவன் அறியாமல் ஒன்றுமே நடக்க முடியாது, எதுவுமே நடக்க முடியாது. நல்ல மேய்ப்பனைப் போல், அவர் சென்று... வேதாகமம் இன்னின்ன விதமாய் கூறுகிறதென்று என்னால் வேதாகமத்திலிருந்து அதை காண்பிக்க முடியாது. இது என் சொந்த கருத்து.