110. பிள்ளை பெறுவதனால் மனைவி இரட்சிக்கப்படுவதில்லை. இப்பொழுது ஒரு நிமிடம் 1 தீமோத்தேயு 2:8க்கு வேதாகமத்தை திருப்புவோம். பிள்ளையைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறதென்று நாம் காண்போம். அது ஒரு கத்தோலிக்க உபதேசம் என்பதை உணருகிறேன். ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதன் மூலம் ஒரு ஸ்திரீ இரட்சிக்கப்படுகிறாள் என்று கத்தோலிக்கன் கூறுகிறான். ஆனால் நாமோ... அதை நான் விசுவாசிப்பதில்லை. 1 தீமோத்தேயு 2ம் அதிகாரம், 9ம் வசனத்திலிருந்து தொடங்கி படிப்போம். சரி, கவனியுங்கள்.
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது... (சகோதரரே, நான் உங்களுக்கு இங்கு உதவி செய்கிறேன் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை புது தொப்பிகள் அணிவது போன்றது. பாருங்கள்? அது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல)... தங்களை அலங்கரியாமல்.
தகுதியான வஸ்திரத்தினாலும்... (அது என்னவென்று நாம் கேட்கக்கூடாது. இல்லையா? இதை கவனியுங்கள்)... நாணத்தினாலும்... (வ்யூ)... தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற
ஸ்திரீகளுக்கு ஏற்றப்படியே நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்க வேண்டும். ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுள்ளவளாயிருந்து, அமைதலோடு கற்றுக் கொள்ளக்கடவள்.
உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடும் விசுவாசத்திலும் (அப்படிப்பட்ட ஸ்திரீயைக் குறித்து தான் பவுல் பேசுகிறான், ஏற்கனவே இரட்சிக்கப்பட்ட ஸ்திரீயைக் குறித்து (பாருங்கள்?). அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால்... (பாருங்கள்? அவள் நிலைக் கொண்டிருந்தால், அவள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவள்)... பிள்ளை பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். (பவுல் உலகப் பெண்கள் குழந்தைகளைப் பெறுவதைக் குறித்து இங்கு கூறவில்லை).
111. ஒரு குழந்தையைப் பெறுவது அவள் இரட்சிக்கும்படி செய்வதில்லை, ஆனால் அவள் பிள்ளைகளை வளர்த்து தன் கடமையை செய்கிறாள்- பிள்ளைக்குப் பதிலாக அவள், இன்று அவர்கள் செய்வது போல், பூனைகளையும் நாய்களையும் வளர்ப்பதில்லை. அவர்கள் இரவெல்லாம் வெளியே சுற்றவேண்டும் என்பதற்காக, மிருகத்தின் மேல் தாயின் அன்பை செலுத்துகின்றனர். சிலர் அப்படி செய்கின்றனர். மன்னிக்கவும், அவர்கள் செய்கின்றனர். அதை நான் எடுத்துக் கூறுவது எனக்கே கஷ்டமாயுள்ளது, ஆனால் உண்மை உண்மையே. பாருங்கள் அவர்கள் குழந்தை ஒரு கட்டாக இருக்க விரும்புவதில்லை. பிள்ளை பேற்றினால், அவள் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும், தெளிந்த புத்தியோடும் நிலை கொண்டிருந்தால், இரட்சிக்கப்படுவாள். அந்த நிபந்தனையை அங்கு கவனியுங்கள். நீங்களும் விசுவாசத்தால் சுகமடைவீர்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் ஆயத்தமாயிருந்தால், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள். அது போன்று அவள் இந்த காரியங்களைத் தொடர்ந்து செய்வாளானால் (பாருங்கள்?) இரட்சிக்கப்படுவாள் - அவள் ஒரு ஸ்திரீ என்பதனால் அல்ல. அதுதான் சரி, சகோதரனே, சகோதரியே. இது கத்தோலிக்க உபதேசமே அல்ல... இங்கு மற்றொரு கடினமான கேள்வி உள்ளது. அதன் பிறகு இன்னும் ஒரு கேள்வி உள்ளது. அதற்கு பதில் கூற நேரம் இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை விவரிக்க என் சொந்த நேரத்தை எடுத்துக்கொண்டேன். இந்த கேள்விகள் எழுப்புதலின் பின் விளைவுகளினால் எழுந்தவை - கூட்டங்களின் பின் விளைவுகள்.