112. சரி, நாம் வேதாகமத்துக்கு சென்று அது என்ன கூறுகிறதென்று பார்ப்போம். அதை நாம் வேதரீதியாக வைத்திருக்கிறோமா என்று காண்போம். நாம் எப்பொழுதுமே வேதரீதியாக இருக்கவே விரும்புகிறோம். 1 கொரிந்தியர் 14. ஒரு மனிதன் தான் பேசின பாஷைக்கு தானே அர்த்தம் உரைப்பது வேதரீதியானதா என்று இந்த நபர் அறிய விரும்புகிறார். "அப்படியானால் 1 கொரிந்தியர் 14:19ஐ விவரிக்கவும்.'' அது என்னவென்று பார்ப்போம். சரி.
அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய பாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
இப்பொழுது அடுத்தப்படியாக 27ம் வசனம், அவர்கள் அறிய விரும்புகின்றனர்.
யாராவது அந்நிய பாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டு பேர் மட்டில் அல்லது மிஞ்சினால் மூன்று பேர் மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
113. அந்த நபர் இதைத்தான் குறிப்பிட முயல்கிறார் என்று கருதுகிறேன் (இன்னும் சிறிது நேரத்தில் ஒரு வசனத்தை படிக்கப் போகின்றேன்). அந்த சகோதரன் அல்லது சகோதரி என்ன குறிப்பிட முயல்கிறார் என்று நான் கருதுகிறேன் என்றால், "அந்நிய பாஷை பேசும் ஒருவர், அவரே அவர் உரைத்த செய்திக்கு அர்த்தம் உரைப்பது சரியா?'' என்பதே. என் அன்பான நண்பரே, நீங்கள் 13ம் வசனத்தைப் படிப்பீர்களானால், அது தெளிவுபடுத்தும்:
அந்தப்படி அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்.
114. நிச்சயமாக, அவனே அவன் செய்திக்கு அர்த்தம் சொல்லலாம். இப்பொழுது நாம் மாத்திரம்... நாம்... நல்லது, நீங்கள்... அது எல்லாவற்றையும் அங்கு படியுங்கள், அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்... முழு அதிகாரத்தையும் சற்று படியுங்கள். அது மிகவும், அது அதை விவரிக்கிறது.
115. இப்பொழுது, அந்நியபாஷை பேசுவதைக் குறித்து... அதன் பேரில் இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருப்பதால்: இது ஒலிநாடாவில் வேறு பதிவு செய்யப்படுகிறது. நான் தெய்வீக சுகமளித்தல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, வரப்போகும் உலகில் வல்லமை போன்றவைகளை விசுவாசிப்பது போல், அந்நிய பாஷை பேசுவதிலும் விசுவாசம் கொண்டுள்ளேன் என்பதைக் கூற விரும்புகிறேன். அவைகளை விசுவாசிப்பது போலவே இதையும் விசுவாசிக்கிறேன். கிறிஸ்துவின் வருகைக்கு ஒரு ஸ்தானம் உள்ளது போல, தெய்வீக சுகமளித்தலுக்கு ஒரு ஸ்தானம் உள்ளது போல, அந்நிய பாஷை பேசுதலுக்கு ஒரு ஸ்தானம் உண்டு என்று நான் விசுவாசிக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் அதனதன் ஸ்தானம் உண்டு.
116. ஜனங்களாகிய உங்களிடம் இப்பொழுது இதைச் கூற எனக்குத் தருணம் கிடைத்துள்ளது, அதை விவரிக்க விரும்புகிறேன். யாரையாவது நான் புண்படுத்தினால், அப்படி செய்ய நான் நினைக்கவில்லை. நான் குழப்பத்தை உண்டாக்க நினைக்கவில்லை. ஆனால் கவனியுங்கள், பெந்தெகொஸ்தேயினர் (நானும் கூட அதில் சேர்ந்தவன், நானும் ஒரு பெந்தெகொஸ்தேயினன், பாருங்கள்?)... தொல்லை என்னவெனில், அவர்கள் அதை மதிப்பதில்லை. மற்றொரு காரியம், அவர்கள் தங்கள் விருப்பப்படி அதை பேசுகின்றனர். அவர்கள் வார்த்தைக்கு திரும்ப வருவதில்லை.
117. இப்பொழுது கவனியுங்கள், இப்படித்தான் சபை அமைக்கப்பட்டுள்ளது. நான் ஒரு பெந்தெகொஸ்தே சபைக்கு போதகனாயிருப்பேனானால், அதை எப்படி அமைக்க எனக்கு விருப்பமென்பதை உங்களிடம் கூறுகிறேன் - எல்லா சமயங்களிலும் அதற்கு நான் போதகராக இருக்க நேரிட்டால். நான் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரத்தையும் ஆதரிப்பேன். முதலாவதாக விசுவாசிகளிடம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறக் கூறுவேன். அப்பொழுது 1 கொரிந்திரியர் 12ல் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரமும் இயங்கத்தான் வேண்டும்- சரீரம் முழுவதும் இயங்கும் நிலைக்கு அதை நான் கொண்டு வர முடிந்தால்.
118. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால்... நான் குறை கூறவில்லை. இதை ஞாபகம் கொள்ளுங்கள், நான் ஒரு வார்த்தையும் முரணாக பேசமாட்டேன். அப்பொழுது நான் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தேவதூஷணம் உரைப்பவனாவேன். நான் அதை தவறாக கூற மாட்டேன் என்று தேவன் அறிவார். பாருங்கள்? இருபது ஆண்டுகளாக நான் வேதாகமத்தை ஆராய்ந்து படித்த பிறகு, வேதாகமம் கூறும் கருத்துக்களை உங்களுக்கு அளிக்க முனைகிறேன். நான் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக பிரசங்கித்து வருகிறேன். நான் எல்லாவற்றின் வழியாகவும் கடந்து வந்திருக்கிறேன். அது எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் சிந்தித்து பாருங்கள். நான் ஒவ்வொரு மனிதனையும், உலகம் முழுவதிலுமுள்ள உபதேசங்களையும் கவனித்து வந்திருக்கிறேன். அப்படி நான் செய்யக் காரணம், அதன் மீதிருந்த என் சிரத்தையே. என் பேரில் மாத்திரமல்ல, மானிடர் பேரில் நான் கொண்டிருந்த சிரத்தையே என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது. நான் இவ்விடம் விட்டு செல்ல வேண்டும் நீங்களும் இவ்விடம் விட்டு செல்லவேண்டும். நான் கள்ளத் தீர்க்கதரிசியாக இவ்விடம் விட்டுச் சென்றால், என் ஆத்துமாவை நான் இழந்து போவது மாத்திரமல்ல, என் ஆத்துமாவும் கூட உங்கள் ஆத்துமாவையும் இழந்து விடுபவனாயிருப்பேன். எனவே இது அன்றாட ஆகாரத்தைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது, இது புகழைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது: இது மற்றெல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது. இது எனக்கு ஜீவன். பாருங்கள்? நான் எப்பொழுதுமே ஆழ்ந்த உத்தமத்தைக் கொண்டுள்ளவனாய் இருக்க விரும்புகிறேன்.
119. இப்பொழுது, நீங்கள் ஒரு பெந்தெகொஸ்தே சபைக்குச் சென்றால் முதலாவதாக. (நான் எல்லாமும் அப்படியென்று கூறவில்லை, சிலர் அப்படியுள்ளனர்...) பெரும்பாலும், நீங்கள் ஒரு சபைக்குச் சென்று அங்கு பிரசங்கம் செய்யத் தொடங்குகின்றீர்கள். நீங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுகின்றார். இந்த அருமையான நபர் ஒருக்கால் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, அது பரிசுத்த ஆவி அவர் மூலமாக பேசுவதாக இருக்ககூடும். ஆனால் காரியம் என்னவெனில், அவர்கள் பயிற்சி பெறவில்லை. மேடையின் மேல் நடக்கும் இந்த ஊழியம், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பிரசங்கித்துக் கொண்டிருக்குமானால், தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கவேண்டும். பாருங்கள்? ''சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது." "ஒருவன் பேசும்போது" என்று பவுல் ஏன் கூறுகிறானென்று வேதத்தைப் படித்துப் பாருங்கள்... அவன் உள்ளே வரும்போது, எல்லாமே குழப்பாயிருந்தது.
120. நான் பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நியபாஷையில் பேசுகிறார். அது... அப்படியானால் பீட அழைப்பைக் கொடுக்காமலிருப்பதே நல்லது. அது அதை நிறுத்துகிறது.
121. பின்பு, வேறொரு காரியம். அநேகமுறை ஜனங்கள் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசுகின்றனர். அப்பொழுது ஜனங்கள் உட்கார்ந்து கொண்டு மெல்லும் பசையை (Chewing gum) மென்று கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேவன் பேசுவாரானால், அமரிக்கையாயிருந்து கவனியுங்கள்! அது சத்தியமாயிருக்குமானால், அந்த மனிதனின் மூலம் பரிசுத்த ஆவி பேசிக்கொண்டிருப்பாரானால், நீங்கள் அமரிக்கையாயிருந்து கவனித்துக் கேளுங்கள், பயபக்தியாயிருங்கள், பாருங்கள்? அமரிக்கையாயிருந்து அர்த்தம் உரைப்பவர் யாராகிலும் உள்ளனரா என்று கவனியுங்கள்! அர்த்தம் உரைப்பவர் யாரும் சபையில் இல்லாமல் போனால், அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் அமைதியாயிருக்கக்கடவர்கள்.
122. அவர்கள் அந்நிய பாஷை பேசினால், அவர்களுக்கும் தேவனுக்கும் மத்தியில் பேசக்கடவர்கள் என்று வேதம் கூறுகிறது. அந்நிய பாஷை பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாகப் பேசுகின்றான். அது அந்நிய பாஷை; வேறொரு பாஷை. "அதனால் ஒரு உபயோகமுமில்லை” என்று அவன் கூறுகிறான். ஒரு சத்தம் உண்டானால், அதற்கு ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். நீங்கள்... எக்காளம் சத்தமிட்டால், அது என்ன சத்தமிடுகிறது (அது எப்படி ஊதப்படுகிறது) என்று நீங்கள் அறியவேண்டும். இல்லையென்றால் யுத்தத்துக்கு எப்படி ஆயத்தம் பண்ணவேண்டுமென்று யாராகிலும் அந்நிய பாஷை பேசி, 'நீட்' என்று சத்தமிட்டால், அவ்வளவுதான். என்ன செய்யவேண்டுமென்று யாருக்குத் தெரியும்? ஆனால் எக்காளம் 'ரிவைல்' (Reveille) ஓசையிட்டால், "எழுந்திருங்கள்” என்று அர்த்தம். அது 'டாப்ஸ்' (taps) ஓசையிட்டால், "கீழே இறங்குங்கள்'' என்று அர்த்தம். பாருங்கள்? அது "சார்ஜ்” (charge) ஓசையிட்டால், "எதிரியைத் தாக்குங்கள்” என்று அர்த்தம். அது அர்த்தத்தை கொடுப்பதாய் அமைந்திருக்கவேண்டும். தனிமையில் பேசுவது மாத்திரமல்ல. எனவே சபையில் அர்த்தம் உரைப்பவர் யாராகிலும் இருந்தால், அப்பொழுது அந்நிய பாஷைகள் சபைக்கு உரியதாகும்.
123. இப்பொழுது, என் அருமை நண்பரே, உங்கள் கேள்விக்கு 'அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய பாஷையில் ஐயாயிரம் வார்த்தைகளை (அல்லது அதற்கு அதிகமாக வேதம் என்ன கூறினாலும்), (பதினாயிரம் வார்த்தைகள் என்று வேதம் கூறுகிறது - தமிழாக்கியோன்) பேசுகிறதிலும் மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்” அது உண்மை. நீங்கள் தொடர்ந்து படிப்பீர்களானால், ''அது வெளிப்படுத்தப்பட்டு அல்லது பக்திவிருத்திக்கேதுவாக அர்த்தம் சொல்லப்படாமல் போனால்.'' பாருங்கள்? அது பக்திவிருத்திக்காகாது.
124. ஒரு சிறு கருத்தை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்... எழும்பிக் கொண்டிருக்கும் இந்த சபைக்கு நான் போதகராக இருந்தால், நான் போதகராக இருக்க தேவன் என்னை அழைப்பாரானால், இப்படித்தான் அதை நடத்தப் பிரியப்படுவேன். வரம் பெற்றுள்ள ஒவ்வொரு வரையும் நான் கண்டுபிடிப்பேன். ஆராதனை தொடங்குவதற்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம் முன்பு அவர்கள் தனியாக ஒரு அறையில் கூடும்படி செய்வேன். அவர்கள் ஆவியின் அபிஷேகத்தில் உட்காரட்டும். முதலாவதாக, அந்நிய பாஷை பேசும் வரம் பெற்ற ஒருவர் எழுந்து அந்நிய பாஷை பேசுகின்றார். எல்லோரும் அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். வேறொருவர் எழுந்து அவர் பேசினதற்கு அர்த்தம் உரைக்கிறார். அது சபைக்கு அளிக்கப்படும் முன்பு, அது இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் நிலைவரப்படவேண்டுமென்று வேதம் கூறுகிறது. அது ஆவியைப் பகுத்தறியும் வரம் கொண்ட மனிதர்களாய் இருக்க வேண்டும் (பாருங்கள்? ஏனெனில் அநேக சமயங்களில் பொல்லாத ஆவிகள் அங்கு நுழைந்து விடுகின்றன. பவுல் அதைக் குறித்து சொல்லியிருக்கிறான். ஆனால் தேவனுடைய வல்லமையும் அங்குள்ளது. பொல்லாத ஆவி இல்லாத ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். தேவபுத்திரர்கள் ஒன்று கூடியிருக்கும் போது, சாத்தான் அவர்கள் நடுவில் இல்லாத ஒரு இடத்தை எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம். அது எல்லாவிடங்களிலும் உள்ளது. எனவே அதைக் கண்டு முகங்கோணாதீர்கள். பாருங்கள்? சாத்தான் எல்லாவிடங்களிலும் இருக்கிறான். இப்பொழுது பார்ப்போம். ஒருவர் அந்நிய பாஷை பேசுகின்றார். இப்பொழுது ஆவிகளைப் பகுத்தறியும் வரம் பெற்ற மூன்று பேர் அங்கு உட்கார்ந்திருக்கின்றனர். ஒருவர் அந்நிய பாஷையில் பேசி ஒரு செய்தியை அளிக்கிறார். அது வேதவாக்கியங்களை எடுத்துரைப்பதாக இருக்கக் கூடாது. ஏனெனில் தேவன் வீணாக மறுபடியும் மறுபடியும் கூறுவது கிடையாது. நாமும் அப்படி செய்யக்கூடாதென்று நம்மை எச்சரித்திருக்கிறார். பாருங்கள்? எனவே அது வேதவாக்கியங்களை அப்படியே எடுத்துரைப்பதல்ல. அது சபைக்கு ஒரு செய்தி.
125. இந்த எழுப்புதலில் இதுவரைக்கும் நமக்கு இரண்டு சம்பவங்கள் நிகழந்தன. அவைகளில் ஒன்று மிகவும் பிழையின்றி சரியான விதத்தில் அமைந்திருந்தது. பாருங்கள்? ஒரு மனிதர் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, அப்பொழுது அளிக்கப்பட்ட செய்தி உண்மையானது என்று உறுதிப்படுத்தினார். அன்றொரு இரவு வேறொருவர் எழுந்து நின்று தீர்க்கதரிசனத்தின் ஏவுதலினால், அவர் என்ன கூறுகிறார் என்று அறியாமலே, ஒன்றைக் கூறி, முடிவில் கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்றார். அப்பொழுது உடனடியாக ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டு, "அதாவது, கர்த்தர் வந்துள்ளார் என்று விசுவாசிப்பவன் பாக்கியவான்'' என்று கூறினது.
126. பாருங்கள், அர்த்தம் - பிறகு பரிசுத்த ஆவி நேற்றிரவு கட்டிடத்தில் விழுந்தது. பாருங்கள்? அது பக்திவிருத்திக்காக. நான் நின்று கொண்டு, ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்களிடம் கூற முயன்றேன். அப்பொழுது பிசாசும் அவர்கள் மத்தியில் வந்து,
"அதற்கு செவி கொடுக்காதே சும்மாயிரு” என்றான்.
என் சகோதரி என்னிடம் "பில் நீங்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருந்தது. நான் எழுந்து மதிலைத் தாண்டிச் செல்லக்கூடும் என்பது போன்ற உணர்ச்சி எனக்கு உண்டானது'' என்றாள்.
"நான், "எழுந்து தாண்டு” என்றேன். அவ்வளவுதான்.
அவள், ''நீங்கள் அப்படி பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, ஜனங்கள் கூச்சலிடத் தொடங்கினர். நான் ஒன்றுமற்றவள் என்னும் உணர்ச்சி தோன்றினது” என்றாள்.
127. நான், ''அது பிசாசு, அது சாத்தான். அவன் அப்படிப்பட்ட உணர்ச்சியை உண்டாக்க வந்தபோது, நீ எப்படியாயினும் எழுந்திருக்க வேண்டும்'' என்றேன். நாம் தேவனுக்கு ஆசாரியர்களாயிருந்து நம்முடைய உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலியை அவருடைய நாமத்துக்கு செலுத்திக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்?
128. இப்பொழுது, இதுதான் நடந்தது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் பேசத் தொடங்கினார். ஏனெனில் அது... விசுவாசிக்கிறவன் பாக்கியவான்' இரண்டு மூன்று இரவுகளாக அதை நான் வலியுறுத்த முயன்றேன். அதன் பின்பு பரிசுத்த ஆவியானவர் பேசி (பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் ஒருவர் பேசி), ''கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்று உரைத்தார். நான் வேறெதாவது ஒன்றைக் கூறுவதற்கு முன்பே, "கர்த்தர் இதில் வந்துள்ளார் என்று விசுவாசிக்கிறவன் பாக்கியவான்'' என்று கூறினேன். பார்த்தீர்களா? பரிசுத்த ஆவி என்பது உங்களுக்குள் இருக்கும் தேவனே என்று நான் கூறி வந்தேன். பாருங்கள்? அவர்கள் அதைப் புரிந்து கொண்டனர். பாருங்கள்? பிறகு பரிசுத்த ஆவி ஜனங்களின் மத்தியில் விழுந்தது. தீர்க்கதரிசனம் எவ்வாறு பக்தி விருத்தியடையச் செய்கிறதென்று பாருங்கள்.
129. தீர்க்கதரிசிக்கும் தீர்க்கதரிசனத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தீர்க்கதரிசனம் ஒருவரிடத்திலிருந்து புறப்பட்டு மற்றவரிடம் செல்கின்றது. ஆனால் தீர்க்கதரிசியோ தொட்டிலில் பிறந்தது முதல் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறான். அவர்களிடம் ''கர்த்தர் உரைக்கிறதாவது” என்பது உள்ளது. அவர்கள் கூறுவது சரியாவென்று யாரும் நிலைவரப்படுத்துவதில்லை. முன்பிருந்த ஏசாயா, எரேமியா அல்லது மற்ற தீர்க்கதரிசிகள் உரைத்தவைகளை அவ்வாறு நிலைவரப்படுத்த வேண்டிய அவசியமிருந்ததாக நீங்கள் காண்பதில்லை. ஏனெனில் அவர்களிடம் ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பது இருந்தது, ஆனால் ஜனங்களிலுள்ள தீர்க்கதரிசன வரத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். ஏனெனில் சாத்தான் மெல்ல நுழைந்து விடுவான். பாருங்கள்? அது சரியாவென்று நிலை வரப்படுத்தப்பட வேண்டும்.
130. இப்பொழுது, நாம் எழுப்புதல் கூட்டம் ஒன்றை நடத்தப் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். போதகர்களே, இதை கவனமாய்க் கேளுங்கள். நாம் எழுப்புதல் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். சபையில் அனல் மூண்டிருக்கிறது. சபை எப்பொழுதும் அவ்வாறே இருக்கவேண்டும். ஒருக்கால் ஆவியின் வரம் பெற்ற ஐந்து அல்லது ஆறு பேர் நம்மிடம் உண்டு. ஒருவர் அந்நிய பாஷை பேசுகிறார்: இரண்டு அல்லது மூன்று பேர் ஒருக்கால் அந்நிய பாஷை பேசக்கூடும். நான்கு அல்லது ஐந்துபேர் அந்நிய பாஷையில் பேசும் வரம் உடையவர்களாயிருந்து, அந்நிய பாஷைபேசக் கூடும். இரண்டு அல்லது மூன்று பேர் அர்த்தம் உரைக்கக் கூடும். அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் ஞானத்தின் வரத்தை உடையவர்களாயிருக்கக் கூடும். சரி. வரம் பெற்றுள்ள இவர்கள் அனைவரும் ஒன்றுகூடுகின்றனர்... நீங்கள்... நீங்கள் விளையாடுவதற்காக இந்த வரங்கள் உங்களுக்கு அளிக்கப்படவில்லை. "நான் அந்நிய பாஷை பேசுகிறேன். அல்லேலூயா!'' என்று நீங்கள் கூறுவதற்காக இவைகள் உங்களுக்கு அளிக்கப்படவில்லை- அப்படியென்றால் உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்கிறீர்கள். அவைகளைக் கொண்டு நீங்கள் கிரியை செய்யவே அவை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் பாகம் சபை ஆராதனை தொடங்குவதற்கு முன்பு இடம் பெற வேண்டும். ஏனெனில் ஆராதனையின்போது கல்லாதவர்களும் கூட நமது மத்தியில் இருப்பார்கள்.
131. நீங்கள் ஒரு அறைக்குச் சென்று அங்கு உட்கார்ந்து கொள்கிறீர்கள்- வரம் பெற்றவராகிய நீங்கள் அனைவரும் ஒருமித்து ஏனெனில் நீங்கள் சுவிசேஷத்தில் உடன் ஊழியக்காரராயிருக்கிறீர்கள். அங்கு நீங்கள் உட்கார்ந்துகொண்டு, "ஆண்டவரே, நாங்கள் அறியவேண்டுமென்று நீர் விரும்பும் ஏதாகிலும் இன்றிரவு உண்டா ? ஓ, பரலோகப் பிதாவே, எங்களோடு பேசும்” என்று உங்கள் ஜெபங்களையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்து, பாடல்களைப் பாடுகின்றீர்கள். அப்பொழுது பரிசுத்த ஆவி இறங்கி வந்து யார் மேலாகிலும் விழுந்து, அவர் அந்நிய பாஷை பேசுகின்றார். வேறொருவர் எழுந்து நின்று "கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறி அதற்கு அர்த்தம் உரைக்கிறார். அது என்ன? கவனியுங்கள். ''சென்று சகோ. ஜோன்சிடம் அவர் வசிக்கும் இடத்தை விட்டு மாறும்படியாக கூறுங்கள். ஏனெனில் நாளை பிற்பகல் அந்த நாட்டை பலத்த புயல் காற்று ஒன்று தாக்கப் போகின்றது. அது அவருடைய வீட்டை சேதப்படுத்தும். அவருடைய சாமான்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டுப் போகக் கூறுங்கள்.
132. அது நல்லதாகத் தென்படுகிறது. ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். அங்கு ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற மூன்று பேர் இருக்க வேண்டும். அவர்களில் ஒருவர், "அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது'' என்கிறார் மற்றொருவர், "அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது'' என்கிறார். அது மூன்றில் இரண்டு பேர்- இரண்டு அல்லது மூன்று சாட்சிகள். சரி. அவர்கள் ஒருதாளில் அதை எழுதுகின்றனர். ஏனெனில் அது ஆவியானவர் உரைத்தது. சரி அவர்கள் ஜெபித்து, கர்த்தருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
133. சிறிது கழிந்தது, தீர்க்கதரிசன வரம் பெற்ற ஒருவர் எழுந்து நின்று, "கர்த்தர் உரைக்கிறதாவது, இன்றிரவு நியூயார்க் பட்டினத்திலிருந்து பெண் ஒருத்தி வந்தாள். அவள் டோலியில் (stretcher) கட்டிடத்துக்குள் கொண்டு வரப்படுவாள். அவள் தலையில் பச்சை நிறமுள்ள ஒரு துணியைக் கட்டியிருப்பாள். அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறாள். கர்த்தர் அவளுக்கு விரோதமாக இவ்விதம் செய்த காரணம் என்னவெனில் அவளுக்கு பதினாறு வயது இருக்கும்போது, அவள் அவருடைய சபையிலிருந்து ஒரு முறை பணத்தை திருடி விட்டாள். அவளிடம் இதைக் கூறும்படியாக சகோ. பிரன்ஹாமிடம் கூறுங்கள். "கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் இதை சரிபடுத்திக் கொண்டால் சுகமடைவாள்'' என்று உரைக்கிறார். ஒரு நிமிடம் பொறுங்கள். அது நல்லதாகத் தென்படுகிறது. ஆவியைப் பகுத்தறிபவரே, உங்கள் பெயரை நீங்கள் தாளில் கையொப்பமிடப் போகின்றீர்கள். இல்லையா?
134. ஒருவர் எழுந்து, “இது கர்த்தரிடத்திலிருந்து வந்தது” என்கிறார். மற்றாருவர், கர்த்தரிடத்திலிருந்து வந்தது” என்கிறார். நீங்கள் ஒரு தாளில், "இன்றிரவு பெண் ஒருத்தி வரப் போகிறாள். இன்னின்னது சம்பவிக்கும்” என்று எழுதுகிறீர்கள். ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற இரண்டு அல்லது மூன்று பேர் அதை ஆமோதித்து கையொப்பமிடுகின்றனர். இந்த செய்திகளை அனைத்தும் அங்கு அளிக்கப்படுகின்றன.
சரி.
135. சிறிது நேரம் கழிந்தது மணி அடிப்பதை அவர்கள் கேட்கின்றனர். சபை ஆராதனை தொடங்கும் நேரம் வந்து விட்டது. அவர்கள் எழுதப்பட்ட இந்த செய்திகளைக் கொண்டு வந்து மேசையின் மேல் வைக்கின்றனர். இந்த மேசையில்தான் இவை வைக்கப்படும். நான் எங்கோ ஓரிடத்தில் படித்து, ஜெபித்துக் கொண்டிருப்பேன். பாடல்கள் பாடப் பட்ட பின்பு, சிறிது கழிந்து, நான் வெளியே வருவேன். சபை அனைத்தும் ஒழுங்கை கடைபிடித்து, ஜனங்கள் உள்ளே வந்து உட்கார்ந்து, தியானித்து, ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் நீங்கள் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் நீங்கள் சபைக்கு வந்து, ஒருவரொடொருவர் பேசக்கூடாது. நீங்கள் சபைக்கு வந்து தேவனோடு பேசவேண்டும். உங்கள் ஐக்கியத்தை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? இப்பொழுது நாம் தேவனுடன் இங்கு ஐக்கிய கொள்கிறோம். நாம் இங்கு வந்து தேவனுடன் பேசுகிறோம். எல்லாமே அமைதியாயும் பயபக்தியாயும் உள்ளது. ஆவியானவர் அசைவாடுகின்றார். பாடல் ஆராதனை தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே பியானோ வாசிப்பவர் பியானோவின் அருகில் வந்து,
என் இரட்சகர் மரித்த அந்த சிலுவையின் கீழ் பாவம் கழுவப்படுவதற்காக நான் கதறினேன்.
என்பது போன்ற ஒரு நல்ல பாடலை இனிமையாக அமைதியாக இசைக்கிறார். அது கூட்டத்தில் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தைக் கொண்டு வருகிறது பாருங்கள்?
136. ஜனங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் அழுது, ஆராதனை தொடங்குவதற்கு முன்பே மனந்திரும்பி பீடத்தண்டை வருகின்றனர். ஏனெனில் பரிசுத்த ஆவி அங்கே இருக்கிறார். பாருங்கள்? சபை பிரசவவேதனை அடைந்துள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கள் ஸ்தானத்தை வகித்து ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மெல்லும் பசையை (Chewing gum) மென்று கொண்டு, "ஏ,லிடி, உன் உதடு வர்ணத்தை கொஞ்சம் எனக்குத் தா. எனக்கு வேண்டும்... உனக்குத் தெரியும். உனக்குத் தெரியும் எனக்கு அது தேவை... உனக்குத் தெரியுமா, அன்றொரு நாள் நான் கடைக்குச் சென்றிருந்தபோது, உன்னை அங்கு தூரத்தில் கண்டேன். நான் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை... அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?'' என்று வம்பளந்து கொண்டிருப்பது கிடையாது. ஓ, இரக்கம்! அதன் பிறகு இதை தேவனுடைய வீடு என்றழைக்கின்றனர். அது அவமானம். கிறிஸ்துவின் சரீரம் ஒன்று கூடி வருகின்றது. நாம் அங்கு உட்காருகின்றோம்.
பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன், ''நாங்கள் அங்கு சென்றிருந்த போது இன்னின்னது, இன்னின்னது...'' என்கிறான். அதெல்லாம் வெளியில் பேசவேண்டும், இது தேவனுடைய வீடு.
137. ஜெபம் செய்து கொண்டே உள்ளே நுழையுங்கள்: உங்கள் இடத்தில் அமருங்கள். சகோதரரே, நான் உங்கள் சபைகளைக் குறித்து பேசவில்லை. நீங்கள் அங்கு என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் என் கூடாரத்திற்கு இதை கூறிக்கொண்டிருக்கிறேன். என் சொந்த பின் வாசலுக்கு நீங்கள் (back door) இதை கூறிக்கொண்டி ருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை.
138. நீங்கள் அப்படி உள்ளே வரும்போது, முதலாவதாக போதகர் வெளியே நடந்து வருகிறார். அவர் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் இது அது, மற்றதற்கு பதில் கூறவேண்டியதில்லை. அவர் தமது ஊழியத்தின் பனித்துளிகளின் கீழிருந்து நேரடியாக வெளியே வருகிறார். அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழிருந்தார். அவர் அங்கிருந்து, அதிக அக்கினி நாவுகள் ஒன்று கூடியுள்ள இடத்துக்கு வருகிறார். அது ஏறக்குறைய அக்கினி ஸ்தம்பம் பாருங்கள்?), அது சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர் அங்கு வந்து மேசையின் மேல் வைக்கப்பட்டுள்ள தாளை கையிலேடுத்துப் படிக்கிறார்: "சபைக்கு ஒரு செய்தி கர்த்தர் உரைக்கிறதாவது, சகோ. ஜோன்ஸ் தமது வீட்டிலிருந்து வெளியேற வேண்டும். நாளை பிற்பகல் 2.00 மணிக்கு அவருடைய இடத்தை பலத்த புயல்காற்று ஒன்று தாக்கும். அவருடைய சாமான்களை அவர் எடுத்துக் கொண்டு புறப்பட்டு செல்ல வேண்டும்.'' சகோ. ஜோன்ஸ் அதை கேட்கிறார். சரி அது எழுதி வைக்கப்பட்டுள்ளது. "கர்த்தர் உரைக்கிறதாவது, இன்னின்ன பெயருடைய ஒரு ஸ்திரீ இன்றிரவு இங்கு வருவாள். அவள் இன்னின்னதை செய்திருக்கிறாள்'' (நான் உங்களிடம் ஏற்கெனவே கூறினது போன்று). சரி, அது எழுதப்பட்ட தாள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். அவர்கள் சபையில் ஏற்கெனவே தங்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். சரி.
139. பிறகு போதகர் செய்தியளிக்கிறார். அவர் பிரசங்கம் செய்யும் போது, எதுவுமே குறுக்கே பேசி அவரைத் தடை செய்வதில்லை. அது ஏற்கனவே பேசப்பட்டு விட்டது. நாங்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறோம். நாங்கள் செய்தியளித்து முடிக்கிறோம்.
140. சற்று கழிந்து... முதலாவதாக என்ன தெரியுமா, செய்தியளித்து முடிந்த பிறகு ஜெபவரிசை தொடங்குகிறது. அங்கு ஒரு ஸ்திரீ வருகிறாள். அவள் வரப்போவதாக ஒருவர் அந்நிய பாஷை பேசி முன்னறிவித்து விட்டார். பாருங்கள்? எனவே என்ன நடக்கப் போகிறதென்று எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அது எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். உங்கள் மேல் அக்கினி நாவுகள் நின்றுகொண்டு, விசுவாசம் எப்படி அதிகரிக்கிறதென்று பாருங்கள்! அந்த அக்கினி நாவுகளெல்லாம் இப்பொழுது ஒன்று கூடுகின்றன. அது முடிவு பெற்ற கிரியையாயுள்ளது. அவ்வளவுதான்.
அந்த ஸ்திரீ... நான், ''நியூயார்க் பட்டினத்திலிருந்து வந்து இங்கு அமர்ந்துள்ள திருமதி இன்னார்...'' என்பேன் பாருங்கள்?
"ஓ, அது உண்மை. உங்களுக்கு அது எப்படி தெரியும்?”
''அது கர்த்தரிடத்திலிருந்து சபைக்கு உண்டான செய்தி. நீ பதினாறு வயதுடையவளாய் இருந்தபோது, நீ இன்னின்ன இடத்தில் இருந்தாய். அப்பொழுது நீ சபையிலிருந்து சிறிது பணத்தைத் திருடி, அதைக் கொண்டு உனக்குத் துணிமணிகள் வாங்கிக்கொண்டாய் அல்லவா?''
''ஓ, அது உண்மை. அது உண்மை
“அதை தேவன் இன்றிரவு எங்களுக்கு சகோ. இன்னார் பேசின அந்நிய பாஷை மூலம் கூறினார். அதற்கு சகோ. இன்னார் அர்த்தம் உரைத்தார். இங்குள்ள சகோ. இன்னார் அதை பகுத்தறிந்து, அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது என்று கூறினார். அது உண்மை.''
"ஆம்"
"அப்படியானால், கர்த்தர் உரைக்கிறதாவது, அதை சரிபடுத்தி விடு. அப்பொழுது நீ புற்று நோயிலிருந்து சுகம் பெறுவாய்"
141. சகோ. ஜோன்ஸ் வீட்டுக்குச் சென்று, வண்டியில் சாமான்களை ஏற்றி, அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு (சகோ. பிரன்ஹாம் புயல் காற்றின் சப்தத்தை வாயினால் உண்டாக்குகிறார் - ஆசி). எல்லாவற்றையும் நொறுக்கி விடுகிறது. பாருங்கள்? அப்பொழுது சபை தேவனை மகிமைப்படுத்துகிறது... "கர்த்தராகிய இயேசுவே, உமது நன்மைக்காக நன்றி'' அது சபை பக்திவிருத்தி அடைவதற்கு ஏதுவாக உள்ளது.
142. அவர்கள் கூறினவை நிறைவேறாமல் போனால் உங்கள் மத்தியில் பொல்லாத ஆவி உண்டென்று அர்த்தம். அந்த பொல்லாத ஆவி உங்களுக்கு வேண்டியதில்லை. வானங்கள் உண்மையான பெந்தெகொஸ்தே ஆவியினால் நிறைந்துள்ளபோது, உங்களுக்கு ஏன் இந்த பொல்லாத ஒன்று? பிசாசினிடமிருந்து அதற்கு பதிலாக பொல்லாத ஒன்றைப் பெற்றுக்கொள்ளாதீர்கள். உண்மையான ஒன்றை பெற்றுக் கொள்ளுங்கள். தேவன் உங்களுக்காக அதை வைத்திருக்கிறார். நீங்கள் சரியென்று தேவன் ஏற்கெனவே உங்களை உறுதிப்படுத்தியிருந்தாலொழிய இந்த கூட்டங்களை ஒழுங்கு செய்யாதிருங்கள். ஏனெனில் சுவிசேஷ கிரியை செய்வதற்கு நீங்கள் சபைக்கு உதவி செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அது என்னவென்று புரிந்து கொண்டீர்களா?
143. அந்நிய பாஷை பேசுதல்... அவர் என்ன பேசுகிறாரென்று எந்த மனிதனுமே புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு அர்த்தமுண்டு. இதற்கு ஒரு அர்த்தமுண்டு. (சகோ.பிரன்ஹாம் கைதட்டி சத்தம் எழுப்புகிறார் - ஆசி) "க்ளக், க்ளக், க்ளக்''. அது எங்கோ ஒரு மொழியாக அமைந்துள்ளது.
144. நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, அதை நம்பவேயில்லை. ஆனால் ஒவ்வொன்றும் இடும் சத்தத்துக்கும் ஒரு அர்த்தமுண்டு. அர்த்தமில்லாத ஒரு சத்தமும் கிடையாது என்பதாக வேதம் கூறுகிறது. எழுதப்பட்ட ஒவ்வொரு சத்தத்துக்கும் ஏதோ ஒரு அர்த்தமுண்டு. ஜனங்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்... நான், "தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து" என்பேன்.
145. உடனே ஒருவர் இப்படி கூறுவார். (சகோ. பிரன்ஹாமே மோழி பெயர்ப்பாளர் தன் மொழியில் பேசும் சத்தத்தை பாவனை செய்து காண்பிக்கிறார் - ஆசி). மற்றொருவர் இப்படி கூறுவார் (சகோ பிரன்ஹாம் மீண்டும் பாவனை செய்கிறார் - ஆசி). அது ''தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து'' என்று தங்கள் மொழிகளில் அர்த்தம் பாருங்கள்? அது... எனக்கு அது ஒன்றும் புரிவதில்லை, ஆனால் அவர்களுக்கோ, நான் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது போன்று, அது ஒரு மொழி, ஜூலு (Zulu), கோஜா (Koza), பாண்டு (Bantu door) ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாளர் இதை தங்கள் தங்கள் மொழிகளில் மொழிபெயர்த்தபோது, அவர்கள் கூறின ஒவ்வொன்றையும் அவர்கள் புரிந்து கொண்டனர். இந்த ஜனங்கள் முணுமுணுப்பதை நீங்கள் கேட்கிறீர்களே, அது உளறுதல் என்று நீங்கள் நினைக்ககூடும். அப்படியில்லை. அதற்கு ஒரு அர்த்தமுண்டு, எனவே அதற்கு நாம் மதிப்பு கொடுத்து, அதை அதன் ஸ்தானத்தில் பொருத்தவேண்டும்.
146. ஒருக்கால் ஒரு செய்தியும் இல்லாமல் இருக்கலாம். ஆராதனை முடிந்து, பீட அழைப்பு கொடுக்கப்பட்டு முடிந்துவிட்டதென்று வைத்துக்கொள்வோம். சிறிது கழிந்து ஒருவர் (முன்பு ஒரு செய்தியும் கொடுக்கப்படவில்லை) அவருக்குத் தருணம் கிடைக்கும்போது ஒருவர் எழுந்து நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பரிசுத்த ஆவி... "அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால். அவன் பேசாமலிருக்கக்கடவன்” என்று வேதம் உரைக்கிறது (1கொரி. 14:28). அது எவ்வளவு தான் பேசப் பிரயாசப்பட்டாலும், பேசாமலிருங்கள்.
147. "என்னால் முடியாது'' என்று சொல்லிவிடுங்கள் நீங்கள் அப்படி சொல்லி விடலாம் என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? அத்துடன் அது முடிவு பெற்று விடுகிறது. பாருங்கள்? அவன் பேசாமலிருக்க கடவன்.
148. ஆனால் எல்லாமே சபையில் ஒழுங்காயுள்ள தருணம் ஏற்பட்டு, செய்தியைக் கொடுப்பதற்காக பரிசுத்த ஆவி ஒருவர் மேல் வந்தால், அப்பொழுது செய்தி கொடுங்கள். அதைதான் நீங்கள் செய்ய வேண்டும். அப்பொழுது அர்த்தம் வருகிறது: “இங்கு சாலி ஜோன்ஸ் என்னும் பெயருடைய பெண் ஒருத்தி இருக்கிறாள். (அத்தகைய பெயர் கொண்ட யாரும் இங்கில்லை என்று நினைக்கிறேன்) சாலி ஜோன்ஸ் (பாருங்கள்) இதுவே அவள் அழைக்கப்படும் கடைசி இரவாயிருக்கும் என்று அவளிடம் கூறுங்கள். அவள் தேவனிடம் அதை சரிபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வவுலகில் அவள் குறுகிய காலமே இருப்பாள்” அப்பொழுது சாலி ஜோன்ஸ் அவளால் இயன்றவரை விரைந்து பீடத்துக்கு ஓடி வருவாள் (பாருங்கள்?) ஏனெனில் அதுவே அவளுடைய கடைசி அழைப்பு. பாருங்கள்? அதுதான் ஒரு செய்தி கொடுப்பது, உறுதிப்படுத்துவது அதைப் போன்ற ஒன்று.
149. அதுவே இயங்கிக் கொண்டிருக்கும் பெந்தெகொஸ்தே சபை. பொல்லாத ஆவிகள் புகுந்து கொள்ள வழியேயில்லை. ஏனெனில் அது ஏற்கெனவே... வேதம் வெளிப்படையாக, இரண்டு அல்லது மூன்று பேர் பேசலாம். இன்னும் இரண்டு பேர் அது சரியாவென்று நிதானிக்ககடவர்கள்'' என்கிறது. அதுதான் சபை. ஆனால் ஒருவர் அந்நிய பாஷை பேசும்போது மற்றவர் குதித்து, சிரித்து, வேறெங்கோ பார்த்துக்கொண்டு வேறெதாவதை குறித்து பேசிக்கொண்டு, போதகர் ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பது, மற்றவர்களை சுற்றிலும் கூட்டம் கூடுவது போன்றவைகளை நாம் இன்று எங்கிருந்து பெற்றோம்? அது சரியல்ல. போதகர் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் எழுந்து தடை செய்வது... ஒருவர் வேதாகமத்தை படிப்பது. வேறொவர் பின்னாலிருந்து அந்நிய பாஷை பேசி இப்படியாக அவரைத் தடை செய்து. ஓ, அப்படி செய்யக் கூடாது. பாருங்கள்? போதகர் பிரசங்க மேடையில் நின்றுகொண்டு பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசி அவரைத் தடை செய்தால், அது பரிசுத்த ஆவி இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியை எந்த சந்தர்ப்பங்களில் உபயோகிக்க வேண்டுமென்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும் (பாருங்கள்) அதை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று.
நான் அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். இன்னும் ஒரு கேள்விக்கு இடமுண்டா? பிறகு, நாளை ஞாயிற்றுக்கிழமை. அப்பொழுது நாம்... இங்கு ஒரு கேள்வி உள்ளது. அது மிகவும் அருமையான ஒன்று நீங்கள் இன்னும் சில நிமிடங்கள் என்னுடன் தயவு கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். ஒரு நோக்கத்துக்காகவே இந்த கேள்விக்கு இதுவரை பதில் கூறாமல் வைத்திருந்தேன். இதுவே என் கடைசி கேள்வி.
இந்த நபர் கேட்டிருக்கும் இரண்டு காரியங்களை நான் வாசிக்கப் போகிறேன். அது ஒரு பழைய காகிதத்தில் அழகிய கையெழுத்தால் எழுதப்பட்டுள்ளது. அதை எழுதினது யாரென்று எனக்குத் தெரியாது. எந்த பெயரும் அதில் கையொப்பமிடப்படவில்லை.