150. என் நண்பனே, இதைக் குறித்த என் கருத்தை நான் உங்களுக்குத் தெரிவிக்கப் போகின்றேன். அது தான் சரி என்பதல்ல. ஆனால் அது பயங்கரமான செயல் என்பதே என் கருத்து
151. இதை கூற விரும்புகிறேன். தேவன் என்னை சுவிசேஷ ஊழியத்துக்கு அனுப்பியுள்ளார். பணமில்லாமல் நான் அவதிப்பட்ட தருணம் எனக்கும் இருந்திருக்கிறது. என்னிடம் பணமே இருக்காது. அப்பொழுது நான், ''காணிக்கை தட்டை ஜனங்களிடம் அனுப்புங்கள்'' என்பேன்.
மேலாளர் என்னிடம் வந்து, 'பில்லி இன்றிரவு நமக்கு கூட்டத்துக்கான செலவை கொடுத்து தீர்க்க 5000 டாலர்கள் குறைவாயுள்ளது. அதை செலுத்த ஜெபர்ஸன்வில்லில் உம்மிடம் பணம் உள்ளதா?'' என்று கேட்பார்.
152. நான், ''பரவாயில்லை. தேவன் என்னை இங்கு அனுப்பினார். இல்லையென்றால் இங்கு நான் வந்திருக்க மாட்டேன். (பாருங்கள்?) காணிக்கை தட்டை ஜனங்களிடம் அனுப்புங்கள்'' என்பேன்.
ஆனால் கூட்டம் முடிவதற்கு முன்பே, ஒருவர் வந்து, ''உங்களுக்குத் தெரியுமா, இதன் செலவுக்காக 5000 டாலர்கள் கொடுக்க கர்த்தர் என் இருதயத்தை ஏவினார்'' என்பார். பாருங்கள், பாருங்கள்? முதலாவதாக, அந்த கூட்டத்தை நடத்துவதற்கு வழி நடத்தப்பட வேண்டும்.
153. நிர்ப்பந்தம் செய்வது, பணத்துக்காக பிச்சையெடுப்பது போன்ற செயல்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது தவறு என்பதே என் கருத்து. ஆனால் சகோதரனே, நீங்கள் அதை செய்ய நினைத்தால், உங்கள் மனதை நான் புண்படுத்தாதிருப்பேனாக. பாருங்கள்? ஒருக்கால் அப்படி செய்யும் உரிமையை நீங்கள் தேவனிடமிருந்து பெற்றிருப்பீர்கள். நான் என்னைக் குறித்த மாத்திரமே கூறுகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது.
154. போதகர்கள் பயமுறுத்துவதை நான் கேட்டதுண்டு. அண்மையில் நான் ஒரு கூட்டத்துக்கு சென்றிருந்தேன்... இவர்கள் பெந்தெகொஸ்தேயினர் அல்ல, இது. வேறு சபைகள் (பாருங்கள்?) ஒரு பெரிய 'காம்ப்' கூட்டத்தில் இப்படி நடந்தது. கொடி, நீ அப்பொழுது என்னுடன் இருந்தாய், இன்னும் மற்றவர்களும் அங்கிருந்தனர். இதற்காக அவர்கள் முழு பிற்பகலையும் எடுத்துக் கொண்டனர். அது புகழ் வாய்ந்த ஸ்தாபனக் கூட்டம் - இரண்டு அல்லது மூன்று ஸ்தாபனங்கள் ஒன்று சேர்ந்து நடத்தின கூட்டம் (நமது பட்டினத்திலுள்ள நவீன சபைகளைப் போல் அவை வழக்கமான சபைகள்). அது ஒரு பெரிய கன்வென்ஷன் -அவர்கள் அந்த முழு பிற்பகலையும் இதற்காக உபயோகித்து, மேடையில் நின்று கொண்டு, இந்த கூட்டத்துக்காக ஜனங்கள் பணம் கொடுக்காமல் போனால், தேவன் அவர்களுடைய பயிர்களை அழித்து போடுவார் என்றும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு இளம்பிள்ளை வாதம் வரும்படி செய்வார் என்றும் இப்படிப்பட்ட காரியங்களைக் கூறி அவர்களை பயமுறுத்தினர். நான், "தேவனுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் இது தேவதூஷணம்” என்றேன். தேவன் உங்களை அனுப்பினால், அவர் உங்களை கவனித்துக் கொள்வார். அவர் உங்களை அனுப்பாவிட்டால், ஸ்தாபனங்கள் உங்களை கவனித்துக் கொள்ளட்டும். ஆனால் நீங்கள்... தேவன் உங்களை அனுப்பினால், அவர் உங்களை கவனித்துக் கொள்வார்.