155. நல்லது, அது கிறிஸ்துவைக் குறித்த நாடகமானால் பரவாயில்லை. ஆனால் அது சான்டாகிளாசைக் குறித்ததானால், அவன் பேரில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் வளர்ந்தபோது, அதனின்று அகன்று விட்டேன். எனக்கு சான்டா கிளாசின் பேரில் சிறிது கூட நம்பிக்கை கிடையாது. பாருங்கள்? இவர்கள் வைத்துள்ள சில சிறு கிறிஸ்துமஸ் காரியங்கள் மூடத்தனமானது என்று நான் எண்ணுகிறேன்... அவர்கள் கிறிஸ்துவை முழுவதுமாக கிறிஸ்துமஸிலிருந்து எடுத்து விட்டு, அதில் சான்டா கிளாசை புகுத்தி விட்டனர்.
156. சான்டா கிளாஸ் ஒரு கட்டுக்கதை. (குழந்தைகளாகிய உங்களின் மனதை நான் புண்படுத்தவில்லையென்று நம்புகிறேன்). ஆனால் உங்களுக்கு நான் சொல்லுகிறேன். இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்நகரிலுள்ள ஒரு பெரிய சபையின் போதகர் என்னிடம் வந்தார். அவரை நான் நன்றாக அறிவேன். அவர் என் ஆப்தநண்பர். அவருடை பெயர் சார்லி போஹன்னான். (சகோ.மைக், உங்களுக்கு என் அருமை நண்பர் சார்லி போஹன்னானை ஞாபகமுள்ளதா?). அவர் தமது அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு, ''இந்த பொய்யை என் பிள்ளைகளுக்கு இனி ஒருபோதும் எடுத்துக் கூற மாட்டேன், என் பேரக் குழந்தைகளுக்கும் அதைக் கூற அனுமதிக்க மாட்டேன்'' என்றார். அவர் தொடர்ந்து ''என் மகனுக்கு பன்னிரண்டு வயதான போது, என்னிடம் வந்து சான்டா கிளாசைக் குறித்து பேசினான்” என்றார். அப்பொழுது அவர் அவனிடம், “தேனே உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்'' என்று கூறி சாண்டா கிளாஸ் ஒரு கட்டுக்கதை என்று கூறினார். அவன் தாயிடம் ஓடிச் சென்று அதை அறிவித்தான்.
சிறிது கழிந்து அவன் திரும்ப வந்து, "அப்பா, இயேசுவும் கூட அது போன்று கட்டுக் கதையா?” என்று கேட்டான்.
157. நீங்கள் உங்களின் பிள்ளைகளிடம் உண்மையைக் கூறுங்கள். சாண்டாகிளாஸ் என்பது கிரிஸ் கிரிங்கில் அல்லது பரி.நிக்கோலாஸ் என்று அழைக்கப்பட்ட அநேக ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து ஒரு வயோதிப கத்தோலிக்க பரிசுத்தவான், அவர் பிள்ளைகளுக்கு நன்மை செய்பவராக சுற்றித் திரிந்ததாக வரலாறு கூறுகின்றது. இது ஒரு கத்தோலிக்க அமைப்பு. அவர்கள் அதை வழிவழியாக பாரம்பரியமாக கைக்கொண்டு வருகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தேவனுடைய குமாரன், அவர் உண்மையுள்ளவர், அவர் ஜீவிக்கிறவர்.
இங்கு ஒரு கேள்வி உள்ளது. அதுவே கடைசி கேள்வி. அது ஒரு...
158. இப்பொழுது கவனியுங்கள். இந்த விஷயத்தில் நீங்கள் என்னுடன் இணங்காமல் இருக்கலாம். நீங்கள் இணங்காமலிருந்தால், அது நட்பு முறையில் இருக்கட்டும். அப்படிச் செய்வீர்களா? நான் உங்களை நேசிக்கிறேன், உங்களை புண்படுத்த நான் விரும்பவில்லை. நான் உத்தமமாய் இருக்க விரும்புகிறேன். என் மகனிடம் நான் பொய் சொன்னால், நான் ஒரு பொய்க்காரன். பாருங்கள்? நான் அவனிடம் உண்மையைக் கூறவே விரும்புகிறேன்.
159. நான் அவனிடம் சான்டா கிளாசைக் குறித்து கூறி, ''ஆம், நிச்சயமாக சான்டா கிளாஸ் என்பவர் ஒருவர் இருக்கிறார். கிறிஸ்துமஸ் இரவன்று தந்தையைக் கவனி” என்றேன். பாருங்கள்? ஆம்.
160. உங்களுக்குத் தெரியுமா, நேற்று முந்தின நாள் நான் அங்கு சென்றிருந்தபோது, ஒரு சிறு பெண்ணின் மேல் அதை முயற்சி செய்தேன். அவள் எனக்கு சரியாக பதில் கொடுத்து விட்டாள். 'குவேக்கர் மேய்ட்' என்னும் கட்டிடத்திற்கு நானும் என் மனைவியும் பலசரக்கு வாங்க சென்றிருந்தோம். அங்கு ஒரு சிறு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்றரை வயதுக்கு மேல் இருக்காது. அவள் அங்கு ஒரு சிறு வண்டியில் உட்கார்ந்து கொண்டு 'டிங்கில் பெல்ஸ், டிங்கல் பெல்ஸ்' என்று பாடிக் கொண்டிருந்தாள்.
நான் அவளிடம், ''சாண்டா கிளாஸ் வருவாரென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாயா?'' என்று கேட்டேன்.
அவள், 'மிஸ்டர், அது என் தந்தை ” என்றாள்.
நான், "தேனே, உன் சிறு இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. உனக்கு அறிவு இருக்கிறது'' என்றேன்.
இது மிகவும் கடினமான கேள்வி, நண்பர்களே இதற்கு பதில் கூறினவுடனே முடித்து விடுகிறேன். ஓ, இது அழகான வேத வாக்கியம். ஆனால் அது ஒவ்வொரு நபருக்கும் கடினமாக தோன்றக்கூடிய ஒன்று. அநேக ஆண்டுகளாக அது எனக்குப் புதிராகவே இருந்து வந்தது, ஆனால் தேவனுடைய கிருபையினால் மாத்திரமே... இப்பொழுது பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் மனைவி, இந்த பிற்பகல் இந்த கேள்விக்கு நான் பதில் கூற வேண்டுமென்று அறிந்தபோது, ''பில், நீங்கள் எப்படி பதில் கூறப் போகிறீர்கள்? எனக்கு அது புதிராயுள்ளது. என்னால் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை'' என்றாள்.
நான், ”இனியவளே, இன்றிரவு வா. தேவனுடைய உதவியைக் கொண்டு என்னால் முடிந்த வரைக்கும் அதற்கு பதில் கூறுகிறேன்” என்றேன்.