நாங்கள் விசுவாசிப்பது என்ன
1.வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும் எழுதப்பட்டவைகள் எல்லாம். தேவனால் அருளப்பட்டவை என்று விசுவாசிக்கிறோம்.
2.ஒரே தேவன் உண்டென்றும், அவர் தன்னை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று தன்மைகளில் வெளிப்படுத்தினார் என்றும் விசுவாசிக்கிறோம்.
3.இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியின் வல்லமையால் கன்னி மரியாளிடம் உற்பவித்து, பூரண மனுஷனாக, பூரண தெய்வமாக வெளிப்பட்டார் என்றும் விசுவாசிக்கிறோம்.
4.இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேத வசனத்தின்படி மூன்றாம்நாள் உயிர்த்து நமக்காக பரிந்து பேசுகிறார் என்றும் விசுவாசிக்கிறோம்.
5.இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தின்மூலம் நமக்கு பாவ மன்னிப்பு உண்டாகிறது என்பதில் பூரண நம்பிக்கை கொண்டிருப்பதால், அவருடைய கிருபையினால் நமது விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்படுகிறோம் என்று விசுவாசிக்கிறோம்.
6.நாங்கள் ஒரே தேவன் உண்டென்று விசுவாசிக்கிறோம், பாவ மன்னிப்புக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுகிறோம்.
7.தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், அவர் பழைய ஏற்பாட்டின் யெகோவா - புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து.
8.வில்லியம் மரியன் பிரான்ஹாம் அவர்களால் பிரசிங்கிக்கப்பட்ட கடைசி கால செய்தி மணவாட்டியை ஆயத்தப்படுத்துவதெற்கென்று அளிக்கப்பட்டது என்று விசுவாசிக்கிறோம்.