இந்த உலகத்தில் உள்ள அனைத்து கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இயேசு கிறிஸ்துவின் கொள்கை மாறுவதே இல்லை. காரணம் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார்.தேவன் தனது திட்டத்தை மாற்ற முடியாது, மேலும் அவரால் முடியாது. அவர் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஆரம்பமும் முடிவும் இல்லாதவர் மாறாதவர்.அல்பாவும் ஒமேகாவுமானவர் மாறாதவர்.
புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் எங்கு செல்லும்? அரண்மனைக்குச் செல்லும். மணவாட்டி, அல்லேலூயா, மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுதலில் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவாள். அவரைக் குத்தினவர்களும், அவரைப் புறக்கணித்தவர்களுமான யூதர்களாகிய தன் சொந்த சகோதரர்களுக்கு இயேசு தன்னை அறியப்படச் செய்யும்போது, அதற்காக இயேசு திரும்பி வருகையில், மணவாட்டி இப்புவியில் இருக்கமாட்டாள்.
இந்நாளைக் குறித்து அவர் உரைத்தபடியே அநேக செய்தியாளர்கள் உள்ளனர். ஆனால் அங்கே ஒரு சாயங்கால செய்தி என்பது வருகின்றது ஏனென்றால் அவன் “ஒரு நாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது. அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்” என்று கூறினான்.ஒவ்வொரு காலமும் தன்னுடைய செய்தியையும், செய்தியாளனையும் பெற்றிருந்தது.